Breaking
Sun. Dec 22nd, 2024

ஏ.எச்.எம்.பூமுதீன்

புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ள இத்தருணத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் உட்பட உலக வாழ் முஸ்லிம்கள் அனைவர் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் உண்டாக பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளமை வருமாறு,

புனித நோன்பு மாதம் ஆரம்பமாகியுள்ள இந்த வேளையில் இந்த 30 நாட்களையும் கண்ணியமிக்கதாகவும் சகோதர இனங்களுக்கு இடையில் பரபஸ்பர நம்பிக்கையை தோற்றுவிக்கும் வகையிலும் எமது செயற்பாடுகளையும் வணக்க வழிபாடுகளையும் பயன்படுத்திக்கொள்வோம்.

நோன்பு திறக்கும் வேளைகளை வசதி குறைந்த குடும்பங்களுடன் இணைந்து எமது நோன்பு திறக்கும் சந்தர்ப்பத்தை மிகவும் எளிமையான முறையில் அமைத்துக்கொள்வோம்.

ஆயிரம் மாதங்களை விட மேன்மைமிக்க மாதமாக கருதப்படும் இந்த ரமழான் மாதத்தில் எமது சமுகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் அநீதிகளும் அட்டூளியங்களும் ஒழிந்து போக இறைவனிடத்தில் இருகரம் ஏந்துவோம்

கடந்த வருட நோன்பு எமது சமுகத்தை பொறுத்தவரையில் அச்சமும் இருளும் பயங்கரமும் நிறைந்ததாக இருந்ததை நாம் மறக்கமாட்டோம். ஆனால் இன்று அந்தக் காலம் மாற்றமடைந்து நாடுபூராகவுமுள்ள முஸ்லிம்களும் சௌஜன்யமாக இந்த நோன்பு காலத்தை பயன்படுத்திக் கொள்ள கிடைத்த்சந்தர்ப்பதை இட்டு இறைவனுக்கு நன்றி கூறிக் கொள்ளுவோம்.

எனவே எம்மை அடைந்துள்ள இந்த ரமழான் மாதத்தை இறைவனுக்கு பொருத்தமான முறையில் பயன்படுத்தி இரவு நேர வழக்க வழிபாடுகளில் தம்மை அர்ப்பணித்து ஏழை எளியவர்களுக்கு தர்மங்களைச் செய்து இம்மாதத்தில் அதிக நன்மைகளை ஈட்டிக்கொள்வோம் என வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை வாழ் முஸ்லிம் சகேதரர்களிடமும் அமைச்சர் றிஷாத் மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

Related Post