Breaking
Mon. Dec 23rd, 2024
ஜனாதிபதி தேர்தலின்  பின்னர் ஆரம்பிக்கப்பட்ட புரட்சி இன்னமும்  முடியவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற தேசிய இளைஞர் முன்னணியின் சம்மேளனத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிப்பதி தேர்தலின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட புரட்சி இன்னமும் முடியவில்லை.
இந்நாட்டு இளைஞர், யுவதிகளுக்கு தெளிவான எதிர்காலமொன்றை உருவாக்கிக் கொடுப்பதே இந்நாடு எதிர்கொண்டுள்ள பாரியதும் முதன்மையானதுமான பிரச்சினையாகும்.
வெளிநாட்டு முதலீடுகளை நம் நாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் தேவை என்றும் பிரதமர்  மேலும் தெரிவித்தார்.

Related Post