Breaking
Mon. Dec 23rd, 2024

மகன் வளர்த்த புறாவைக் காண­வில்லை என தேடிச்­சென்ற தந்தை ஒரு­வர்­மீது பக்­கத்து வீட்­டுக்­காரப் பெண் கத்­தியால் குத்­தி­யுள்ளார். படு­கா­ய­ம­டைந்த அவர் வாழைச்­சேனை ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக வாழைச்­சேனை பொலிஸார் தெரி­வித்­தனர்.

இச்­சம்­பவம் கடந்த திங்கட்கிழமை இடம்­பெற்­றுள்­ளது. பிறைந்­து­ரைச்­சேனை முகைதீன் பள்­ளி­வீ­தியில் வசிக்கும் 50 வயது நிரம்­பிய குடும்­பஸ்­தரே இவ்­வாறு கத்­திக்­குத்­துக்கு இலக்­காகி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட நப­ராவார்.

சம்­பவ தின­மான அன்று குறித்த தந்­தையின் மகன் தான் வளர்த்த புறாவைக் காண­வில்லை என்றும் இறு­தி­யாக பக்­கத்து வீட்டின் கூரையில் கண்­ட­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

மகனின் தக­வலின் படி பக்­கத்து வீட்­டுக்குச் சென்று காணா­மல்­போன புறா­வைப்­பற்றி தந்தை விசா­ரிக்­கவே எதிர்­பா­ராத வித­மாக அந்த வீட்டின் உரி­மை­யா­ள­ரான பெண் தந்­தையின் மீது கத்­தியால் குத்தி காயப்­ப­டுத்­தி­யுள்ளார்.

காயங்­க­ளுக்­குள்­ளா­கிய குறித்த தந்தை வாழைச்­சேனை ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட அதேவேளை இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

By

Related Post