மாமிச உணவுகளை உட்கொள்வதை விடுத்து பச்சை காய்கறிகளை உட்கொள்வதனால் உயிர்கொல்லி நோயான புற்றுநோயை தடுக்க முடியும் என தற்போது அமெரிக்க ஆய்வாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 50 வயதிற்கு மேற்பட்ட 38 பேரை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் பச்சை தாவரங்களினால் உருவாக்கிய சல்ஃபரோபேன் (Sulforaphane) எனும் கலவைக்கு புற்றுநோயை எதிர்க்கக்கூடிய சக்தி இருப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
ப்ரோக்கோலி தாவரத்தின் முளைகளில் இருந்து சல்ஃபரோபேன் பெற்றுக்கொள்ளப்படுகின்றது என ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.