Breaking
Mon. Dec 23rd, 2024
கண்டி வைத்தியசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புற்றுநோய் வைத்தியசாலையின் பணிகளை துரிதமாக முடிக்குமாறு சுகாதார அமைச்சர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன மல்வத்து திபட்டுவாவே ஸ்ரீசுமங்கள தேரரை சந்திக்க சென்ற வேளையில் குறித்த புற்று நோய் வைத்தியசாலையின் பணிகள் தாமதமாக முன்னெக்கப்படுகின்றமை தொடர்பில் அமைச்சரிடம் தேரர் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராய்வதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் கண்டி வைத்தியசாலைக்கு சென்று அங்கு இடம்பெற்று வரும் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டுள்ளதுடன், இதன் நிர்மான பணிகளை முன்னெடுத்து வரும் பொறியியலாளர்களின் பணிகள் தொடர்பில்;,மத்திய ஆலோசனை பணியகத்தில் அறிவிக்கும் படி அதிகாரிகளிடம் உத்திரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி புற்றுநோய் வைத்தியசாலை 11 மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. செலவிடப்படும் தொகை 1250 மில்லியன் ரூபாவாகும்.
இந்த கட்டடத்தொகுதியில் 380 நோயாளர் படுகைகள், அவசர சிகிச்சைப் பிரிவு 2 உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துமாறு சுகாதார அமைச்சு கேட்டுள்ளது.
வைத்தியசாலையின் நிர்மாண பணிகளை ஒரு வருடத்திற்குள் பூர்த்தி செய்யுமாறு சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

By

Related Post