Breaking
Fri. Nov 22nd, 2024

-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் –

விடுதலை புலிகளினால் அழிக்கப்பட்ட அக்கரைப்பற்று (புட்டம்பை) மஸ்ஐூதுல் ஜலாலீயா 27 வருடங்கலின் பின்னர் புணர் நிர்மானப்பனியில்..

விடுதலை புலிகளினால் முஸ்லிம்களுக்கு எதிரான இன சுத்திகரிப்பு மற்றும் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைள் 1983 ம் ஆண்டுக்கு பின் வடகிழக்கில் இடம்பெற்றமை மறுக்க முடியாத ஒரு உண்மையாகும் .

அதன் ஒரு அங்கமாக அக்கரைப்பற்று சாகாம வீதியில் அமைந்து இருந்த புட்டம்ப்பை கிராமம் 1989 ஆண்டு காலப்பகுதியில் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி பாரிய உயிர் சேதங்களையும் பொருட் சேதங்களையும் சந்தித்ததுடன் அக்கிராம மக்கள் அக்கரைப்பற்று நகருக்கு இடம் பெயர்ந்தனர் .

யுத்தம் நிறைவடைந்ததும் அம்மக்கள் அவர்களின் பாராமப்ரிய இடத்திற்கு செல்லவில்லை .அம்மக்களின் ஜும்மா பள்ளிவாசல் மாத்திரமே அக்கிராமத்தின் ஷாட்சியாக அழிவடைந்த அடைந்த நிலையில் இருந்து வந்தது.அதனை உயிர்ப்பிக்கும் நோற்கில் பல இளைஞர்கள் ஓன்று இணைந்து துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

தற்போது இப்பிராந்தியம் தமிழ் சகோதரர்கள் முழுமையாக வசிக்கும் பிரதேசமாக இருப்பினும் முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலப்பகுதி இப்பிராந்தியத்தில் காணப்படுவதால் விவசாய நடவடிக்கையில் ஈடு படும் முஸ்லிம்களுக்கு இப்பள்ளி வாசலை புனருத்தாரணம் செய்வதன் ஊடாக மார்க்க கடமைகளை மேட்கொள்ள இலகுவாக அமையும்.

By

Related Post