தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்றே பொதுபல சேனா இயக்கமும் தனி இராச்சியமொன்றை நிர்வாகம் செய்து வருவதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
ஏதெனும் ஓர் இடத்தில் எந்த நேரத்திலாவாது போராட்டமோ அல்லது ஆர்ப்பாட்டமோ நடத்தும் பொதுபல சேனா எவரின் கேள்விக்கும் உள்ளாகாமல் சுதந்திரமாக சென்று விடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் சிறுபான்மை இன மக்களினால் எதிர்நோக்கப்பட்டு வரும் நெருக்கடிகள் குறித்து விசாரணை நடாத்த ஓர் விசாரணை ஆணையாளரை நியமிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
பொதுபலசேனா உத்தியோகப் பற்றற்ற காவல்துறையாக இயங்கி வருகின்றதாகவும், அதனை எவரும் கேள்வி கேட்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். (gtn)