Breaking
Mon. Dec 23rd, 2024

இன்று இலங்கை மக்கள் சுதந்திரமடைந்துள்ளனர். போர்க்குற்றவியல் நீதிமன்றில் ஆஜர் செய்தல் மற்றும் பொருளாதாரத் தடை ஆகிய பீதிகளிலிருந்து மக்களை அரசாங்கம் மீட்டுள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறான செயல்களுக்கு பிரபாகரன் உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் பொறுப்பு சொல்ல வேண்டும்.

குற்றம் செய்தவர்களுக்கு வழக்குத் தொடர்வது என்றும் சிவில் சட்டம் அல்லது இராணுவ சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்வது என்ற நிலை அன்று இருந்தது.

அப்போது இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும், அமெரிக்கா போன்ற நாடுகளுடனான நெருக்கடியும் நாடு சர்வதேச யுத்த நீதிமன்றத்தை எதிர்கொள்ள நேரிடும் என்ற நிலையே சகலரிடமும் இருந்தது.

அப்போதே நாம் ஒரு பொறிமுறையை ஏற்படுத்த தவறியதால் அமெரிக்கா போன்ற பல நாடுகள் ஐ. நா. சபையில் இருந்ததால் 2015 ஆம் ஆண்டில் நாடு பொருளாதாரத் தடையையும் சர்வதேச யுத்த நீதிமன்றத்தையும் எதிர்கொள்ள நேரிடும் என்ற பயம் இருந்தது. இது ஜனவரி 8 ஆம் திகதி விலகியது.

யுத்தம் தொடர்பில் நாம் பேசும் போது ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. அதற்கு முழுமையான பொறுப்புக்கூற வேண்டியது புலிகள் அமைப்புதான். பாரிய பொறுப்பை புலிகளும் பிரபாகரனுமே ஏற்க வேண்டும்.

எனினும் பிரபாகரனோ அவரோடு இணைந்து செயற்பட்ட பெரும்பாலானோர் இப்போது உயிருடனில்லை. அவர்கள் உயிரோடிருந்திருந்தால் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும்.

இதனால் ஒரு தரப்பினருக்கு எதிராக மட்டும் வழக்குத் தொடருவதால் நாட்டில் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியுமா என்பதும் எம் முன் உள்ள கேள்வியாகும்.

நீதிமன்றத்திற்கிணங்கவே செயற்பட வேண்டியுள்ளது. தேவையானபோது வழக்குத் தொடர வேண்டும். எனினும் எந்தத் தரப்புக்கு எதிராக வழக்குத் தொடருவது என்பதும் கேள்வியே.

தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதானால் நல்லிணக்கம் அவசியம். இதற்கு சகலரையும் பற்றிய உண்மையை தெரிந்துகொள்வது முக்கியமாகிறது. உண்மையைத் தெரிந்து கொண்ட பின் முடியுமானளவு ஒன்றிணைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

இதை வழக்குத் தொடருவதன் மூலம் மேற்கொள்ள முடியாது. அவ்வாறானால் அது சாத்தியமற்றுப் போகும். உண்மையைத் தெரிந்து கொள்ளும் பொறிமுறை இதற்கு அவசியமாகிறது. இதற்கென நாம் மூன்று நிறுவனங்களை ஏற்படுத்தியுள்ளோம்.

முதலாவது காணாமற் போனோர் தொடர்பான அலுவலகம், இரண்டாவது குற்றச்சாட்டு சம்பந்தமாகவும் நடந்த சம்பவங்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தி அந்த விசாரணையை முன்னெடுத்துச் செல்வதா என்பதைத் தீர்மானிக்கும் சட்ட அலுவலகம் இவையிரண்டும் இலங்கையரின் தலைமையில் இலங்கைக்கேற்ப நாம் நடைமுறைப்படுத்துவோம்.

விசேட சட்ட நிபுணர்கள் இதுபற்றி ஆராய்ந்து உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பர். அந்த ஆணைக்குழு உண்மையைக் கண்டறிந்த பின் எமது அடிப்படை விடயம் நிறைவு பெறும்.

நவீனமயப்படுத்தப்பட்ட பிலிப் குணவர்தன மைதானத்தை மக்கள் தேவைக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்படி தெரிவித்துள்ளார்.(jvp)

Related Post