Breaking
Thu. Jan 16th, 2025
அரசாங்கம் தொடர்ந்தும் புலிப் பீதியை காண்பித்து தேர்தலில் வெற்றியீட்ட முயற்சிக்கின்றது என  ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.   புலம்பெயர் சமூகத்துடன் அரசாங்கம் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள பாகிஸ்தானின் முன்னாள் நிதி அமைச்சர் ஒருவருடன் கொடுக்கல் வாங்கல் செய்யப்படுகின்றது.
புலம்பெயர் சமூகத்திற்கு என்ன விலை கொடுத்தும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க முடியுமா என்று பார்க்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.   தங்களது தேவைக்காக எவருடனும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளக் கூடியவர்களே இந்த ராஜபக்சக்கள். நாடு முழுவதிலும் பல்வேறு வழிகளில் பிரச்சார நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.   பதாகைகள், சுவரொட்டிகள், காரியாலய அங்குரார்ப்பணம் என பல்வேறு வழிகளில் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.
அரசாங்க நிறுவனங்களின் செலவில் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது.   தற்போதைய ஜனாதிபதிக்கு தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்க எந்த வகையிலும் முடியாது. மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவும் ஜனாதிபதிக்கு முடியாது.    ஈழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகாரத்தை செய்வேன் என்ற ஜனாதிபதியின் தர்க்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறான ஓர் நிலைமையில் ஈழக் கோரிக்கை தொடர்பான வாதம் அர்த்தமற்றது.   புலிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க எனக்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு ஜனாதிபதி மீளவும் கோர ஆரம்பித்துள்ளார்.இவ்வாறான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post