Breaking
Mon. Dec 23rd, 2024

குச்சவெளி பிரதேச சபை முன்னால் உப தலைவர் A.B.தௌபீக், முன்னாள் உறுப்பினர்களான M.I.பதுர்தீன், H.M.சல்மான் பாரிஸ் ஆகியோரின் வேண்டுகோளின் அடிப்படையில்
திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு இணை தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃறூப் அவர்களின் முயற்சியில்
கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவருமான அல்ஹாஜ் றிஷாட் பதுயுதீன் அவர்களின் வழிகாட்டலில்.

புல்மோட்டை அன்வாருல் உலூம் அரபுக்கல்லூரிக்கு 2 மில்லியன் பெறுமதிவாய்ந்த குளியலரை மற்றும் மலசலகூட கட்டிடத்திற்கான அடிக்கல் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃறூப் ஆவர்களின் தலைமையில் நேற்று (07/10/2017) நாட்டப்பட்டது .

இந்நிகழ்வில் அன்வருல் உலூம் அரபுக்கல்லூரி தலைவரும் அமைச்சரின் இஸ்லாமிய கலாச்சாரத்துக்கான இனைப்பாளருமான அல்ஹாபீல் AMM.றியாஸ் ஹஷ்ரத், கல்லூரியின் மௌலவிமார்கள்,மத்ரஷா மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.

Related Post