Breaking
Thu. Jan 9th, 2025

இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ்

திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட புல்மோட்டை கிராமத்திற்கு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று விஜயம் செய்தார்.
புல்மோட்டை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு அமைச்சரின் இந்த விஜயம் அமைந்துள்ளது.புல்மோட்டை நுாலக கேட்போர் கூடத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.
கி்ண்ணியா பிரதேச சபை தவிசாளரும்,திருகோணமலை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளருமான ஹில்மி,குச்சவெளி பிரதேச சபை தலைவர் முபாரக்,குச்சவெளி பிரதேச சபை உறுப்பினரும் கட்சியின் உயர் பீட உறுப்பினருமான பதுர்தீன்,மூதுார் பிரதேச சபை உறுப்பினர் ஜஸ்ரி உட்பட மக்கள் பிரதி நிதிகள் பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த மக்கள் சந்திப்பின் போது புல்மோட்டை வைத்தியசாலைக்கு தண்ணீரை பெற்றுக் கொள்ளவென 24 ஆயிரம் ரூபாவும்,100 குடும்பங்கள் தண்ணீரை பெற்றுக் கொள்ள தலா 10 ஆயிரம் ரூபா வீதம் அமைச்சரினால் வழங்கப்பட்டது.
r1.jpg2_1.jpg5_1 SAMSUNG CAMERA PICTURES r2

Related Post