களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த தேர்தல் தொகுதியொன்றின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் இன்று காலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புளத்சிங்கள தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளர் துசித குலரத்ன என்பவரே அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
இவரது மனைவிக்கு போக்குவரத்துப் பொலிசார் அபராதம் விதித்து, தண்டப்பணம் அறவிடுவதற்கான பத்திரமொன்றை வழங்கியிருந்தனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் துசித குலரத்ன பொலிசாருடன் வாக்குவாதப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பொலிஸ் உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இன்று வெள்ளிக்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் பொலிசார் அறிவித்துள்ளனர்.