Breaking
Thu. Dec 26th, 2024

யாழ்.மாவட்ட செயலகத்தின் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் புதிய அலுவலகம் நேற்று (21) திறந்து வைக்கப்பட்டுள்ளது. புள்ளி விபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் சந்திரசிங்க மற்றும் யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் ஆகியோர் இணைந்து புள்ளி விபரவியல் திணைக்களத்தின் புதிய அலுவலகத்தினை திறந்து வைத்தனர்.

யாழ்.மாவட்ட செயலகத்தின் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களப் பிரிவு இயங்கிய கட்டடத்திலேயே  புள்ளி விபரத் திணைக்களத்தின் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய கட்டடத் திறப்பு விழாவின் பின்னர் புள்ளி விபரத்  திணைக்கள  உத்தியோகத்தர்களுக்கிடையிலான கலந்துரையாடல்  ஒன்றும் நடைபெற்றது. மேலும் இந்தக் கலந்துரையாடலில் புள்ளி  விபரத் திணைக்கள  அதிகாரிகள், யாழ்ப்பாணத்தின் 15 பிரதேச  செயலர்கள் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Post