“பூனையிடம் இருந்து தப்பிப்பதற்கு அதன் கழுத்தில் மணிகட்டுவதே சிறந்த வழியயன எலிகள் முடிவெடுத்தன. இதன்படி, மணியைக் கட்டுவதற்கு அவை தயாராகின. இந்த திட்டத்துக்கு அமைய ஒரு எலி பூனையில் கழுத்தில் மணி கட்டியது. ஆனால், பூனை ” மீயா’ என்றதும் ஏனைய எலிகள் ஓடிவிட்டன.
இந்நிலைமையே இன்று ஹெல உறுமயவுக்கு ஏற்பட்டுள்ளது. எனினும், நாம் பின்வாங்கமாட்டோம். கொள்கைத் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக போராடுவோம். வெளியில் இருந்தாவது நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்”
இவ்வாறு தெரிவித்தார் ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிப் பொதுச் செயலாளரும், மேல்மாகாண சபை யில் அமைச்சுப் பதவியை வகித்த வருமான உதய கம்மன்பில.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இப்படி தெரிவித்தார்.