தெற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த தொல்லியல் துறையினர் இதுவரை கண்டுபிடிக்காத அளவில் மிகப்பெரிய மாளிகையை லண்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்ககோட்டைக்குள் கண்டுபிடித்துள்ளனர்.கோட்டையின் புல் தளத்திற்கு கீழே காணப்பட்ட இந்த மாளிகை 700 வருடத்துக்கும் மேலாக மண்ணில் புதைந்திருக்கலாம் என்றும், வலுவான இந்த மாளிகையின் உள் மற்றும் வெளித்தோற்றம் ரோமானிய அரசின் உலோகக் காலத்தில் கட்டப்பட்டிருப்பதாகவும் தொல்லியல் துறையினர் கருத்து தெரிவித்தனர்
பிரதேசவியல் மற்றும் புவிஇயற்பியல் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அந்த மாளிகையின் உட்புற மற்றும் வெளிப்புற முற்றங்களை தொல்லியல்துறையினர்ஆராய்ந்தனர். தொல்பொருள் ஆய்வாளர்களும், வரலாற்றாய்வாளர்களும் அங்கு ஒரு தொன்மையான நகரம் இருப்பதை அறிந்திருந்தாலும், இதுவரை அந்தத் தளத்தின் முறையான வரைபடம் எதுவும் இல்லை. இந்த முறை ஆய்வில் பூமிக்கடியில் நிறைய கட்டிடங்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த ஆய்வின் மூலம் அந்த நகரஎல்லைக்குள் உள்ள கட்டிடங்களின் விரிவான புகைப்படமும் கிடைத்துள்ளது என்று அங்கு புவி இயற்பியல் ஆய்வை மேற்கொள்ளும் சவுத்தாம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் ஸ்ட்ரட் தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்ட்ரட் “ இந்த அளவு பெரிதான தொன்மமான கட்டிடத்தை பிரிட்டன் தொல்பொருள் துறையினர் கண்டுபிடிப்பது இதுவே முதல் முறை, 3 மீட்டர் கனமான சுவரால் சூழப்பட்ட 170 மீட்டர் நீளமும் 65 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு வளாகம், 60 மீட்டர் நீளம் கொண்ட அரங்கம், மேல்தளம், மற்றும் பல்வேறு தடுப்புச்சுவர்கள் கொண்ட அதன் தோற்றம் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாளிகை என்ற வலுவான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.