Breaking
Mon. Dec 23rd, 2024
தம்புள்ளைப் பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்த கிணறு ஒன்று திடீரென்று பூமிக்குள் புதையுண்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தம்புள்ளையை அண்மித்த நாவுல, பிபில பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

அண்மைக்காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவே தனது தோட்டத்தில் அமைந்திருந்த கிணறு பூமிக்குள் புதையுண்டு போயுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

40 அடி ஆழத்தில் தோண்டப்பட்டிருந்த இந்தக் கிணறு தற்போது சுமார் 20 அடி வரை பூமிக்குள் புதையுண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து நாவுல பிரதேச செயலாளர் ஊடாக கட்டிட நிர்மாண ஆய்வு நிலையத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

By

Related Post