Breaking
Mon. Dec 23rd, 2024

பூமிக்கு மிக நெருக்கமாக ராட்சத விண்கல் ஒன்று நெருங்கி வந்து கொண்டிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த விண்கல் இதுவரை  விஞ்ஞானிகளின் ஆய்வு எல்லைக்குள் தென்படவில்லை எனவும், தற்போது திடீரென்று பூமிக்கு மிக அருகில் வந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

வழக்கத்துக்கு மாறாக பூமியை நெருங்கி செல்லவுள்ள இந்த விண்கல் ஆனது 35 மீட்டர் நீளமுடையதாக காணப்படுகின்றது. இந்த விண்கல்லினால் பூமியிலிருப்பவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றாலும், பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தின் கால் மடங்கு தூரத்தில் பூமியிலிருந்து விலகிச் செல்லும் என கணிக்கபட்டு உள்ளது.

இதேவேளை நாசா நிறுவனத்தின் ஆய்வில்  பூமிக்கு அருகில் உள்ள பொருட்களில் 90 சதவீதமானவை 1 கிலோ மீட்டர் அளவிலும் பெரியவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் 30 சதவீதமான விண் பொருட்கள் 160 மீட்டர் நீளமுடையவையாகவும், ஒரு சதவீதமான பொருட்களே 30 மீட்டர்கள் நீளமுடையவையாகவும் காணப்படுகின்றன.
இந்த ஒரு சதவீதமான பொருட்களில் அடங்கும் விண்கல் ஒன்றே இவ்வாறு பூமியை நெருங்கி பயணிக்கவுள்ளது.

By

Related Post