Breaking
Mon. Dec 23rd, 2024

மிகப் பெரிய விண் தொலைநோக்கியான கெப்ளர் பூமி போன்ற புதிய கோளை கண்டுபிடித்ததுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கெப்ளர் விண்கலம் என்பது விண் தொலைநோக்கி ஆகும். கடந்த 2009ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட கெப்ளர் தற்போது பூமியிலிருந்து 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது. கெப்ளர் தொலை நோக்கி  இதுவரை 1028 கிரகங்களையும், 4661 கிரகம் போன்றவற்றையும் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கெப்ளர் தொலைநோக்கி கிட்டத்தட்ட பூமி போலவே உள்ள ஒரு புதிய கோள்ளை கண்டுபிடித்துள்ளது. இந்த கோளுக்கு கெப்ளர் 452பி எனறு பெயரிடப்பட்டுள்ளது. இது பூமியலிருந்து 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது பூமியை விட சுற்றளவில் 60 மடங்கு  பெரியது. மேலும் இது 6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என இத்திட்டத்தில் பணியாற்றிவரும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Related Post