Breaking
Mon. Dec 23rd, 2024

ஹிலாரி கிளிண்டன் போன்ற பெண்மணிகள் நாட்டின் அதிகாரம்மிக்க பதவிகளில் அமருவதை ஏற்றுக்கொள்ள அமெரிக்க மக்கள் தயக்கம்காட்டி வருவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து  குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப் மோதுகிறார்.

தனது ஆட்சியின்கீழ் வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றிய ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் அதிபராக வருவதற்கு தற்போதையை அதிபரான பராக் ஒபாமா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், நியூயார்க் நகரில் ஹிலாரி கிளிண்டனுக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பேசிய அதிபர் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் போன்ற பெண்மணிகள் நாட்டின் அதிகாரம்மிக்க பதவிகளில் அமருவதை ஏற்றுக்கொள்ள அமெரிக்க மக்கள் தயக்கம்காட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அதிபராக இதுவரை ஒரு பெண்மணிகூட பதவி வகிக்காதது தொடர்பாக இந்நிகழ்ச்சியில் தனது கருத்தினை பகிர்ந்து கொண்ட ஒபாமா, ’அதிகாரம்மிக்க பதவிகளில் பெண்கள் அமர்வதை ஏற்றுக்கொள்ள இயலாத மனநிலையில் உள்ள ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். அவர்கள் அதிகாரத்துக்கு வருவது, நமக்கு பலவகைகளில் இடையூறு என கருதுகிறோம். இத்தகைய நியாமற்ற கருத்து பல வகைகளில் எதிரொலித்தும் வருகிறது’ என்று கூறினார்.

By

Related Post