Breaking
Sat. Jan 11th, 2025

பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினமாக இன்று முதல் மார்கழி 10ஆம் திகதி வரையான காலப்பகுதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்.சமூக செயற்பாட்டு மையம் பெண்கள்,சிறுவர்களின் பாதுகாப்பு நலன் சார்ந்த செயற்பாடுகளை கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக முன்னெடுத்து வருகின்றது.

அத்துடன் கிராம மட்டங்களில் பெண்கள்,சிறுவர்களுடைய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு யாழ்.மாவட்டத்தில் 35 கிராம மட்ட செயற்பாட்டுக் குழுக்களினையும் அமைத்து செயற்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் பெண்கள் வன்முறை ஒழிப்பு தினமான கார்த்திகை 25முதல் மார்கழி 10ஆம் திகதி வரையில் உலகளாவிய ரீதியில் 16தினங்கள் பல்வேறுபட்ட வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post