Breaking
Sat. Nov 16th, 2024

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், தொந்தரவுகள் மற்றும் துஷ்பிரயோகங்களை விசாரிக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மொரவக்க பிரதேசத்தில் நேற்று காலை இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

கஹவத்தை தொடர் கொலை சம்பவம் தனக்கு நினைவில் உள்ளதாகவும் பெண்களுக்கான சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வரும் செயல்முறை துரிதப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியில் மகளிர் உரிமைகள் தொடர்பான சட்டமூலம் கொண்டு வரப்படும் எனவும் பிரதமர் கூறினார்.

மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சகலா ரத்நாயக்க வேலையின்மை பிரச்சினை தீர்க்கப்படும் என கூறினார். இலங்கை அணியின் சனத் ஜயசூரியவின் தாய் மற்றும் பாடகர்கள் ஷரூகாந்த குணதிலக, சமன் டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post