Breaking
Fri. Jan 10th, 2025

போன் செய்த 15 நிமிடங்களில் வீடு தேடிவரும் பீட்ஸாவின் பின்னணியில் பாலின மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான மூலக்கூறுகள் இருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பீட்ஸாவில் உள்ள வெண்ணை போன்ற வழவழப்பான பொருட்கள் அவற்றை பேக்கிங் செய்து எடுத்துச்செல்ல பயன்படுத்தப்படும் கார்ட்போர்ட் பெட்டிகளின் வெளிப்பக்கத்தில் கசியாமல் இருக்க ஒருவகையான ரசாயனப்பூச்சு அட்டைப்பெட்டிகளில் பூசப்படுகிறது.

அவ்வகையிலான அட்டைப்பெட்டிக்குள் பெண் நத்தைகளை அடைத்துவைத்து பரிசோதித்ததில் அந்த நத்தைகளுக்கு மெல்ல,மெல்ல ஆணுறுப்புகள் வளர்வதைக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இவ்வகையில், வெளியேறும் அந்த ரசாயனம் எத்தனை வாடிக்கையாளர்களுக்கு பீட்ஸாவிலும் கலந்து சென்று சேர்ந்துள்ளதோ..? என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இப்படிப்பட்ட அட்டைப்பெட்டிகளில் அடைத்து கொண்டு செல்லப்படும் பீட்ஸாக்களை உட்கொள்ளும் பெண்களின் உடலில் அதிக அளவிலான டெஸ்டோஸ்டெரோனை சுரக்க வைத்து அவர்களை மெல்ல,மெல்ல ஆண்மைத்தன்மை கொண்டவர்களாக மாற்றிவிடும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதைப்போன்ற ரசாயனப்பூச்சு கொண்ட அட்டைப்பெட்டிகளுக்கு அமெரிக்காவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை இங்கிலாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளும் பின்பற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

By

Related Post