பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வதை நிறுத்த முடியாது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
இலங்கையில் விவசாயம், ஆடை கைத்தொழில் உள்ளிட்ட வருமானத் துறைகள் வீழ்ச்சியடைந்து காணப்படுவதால் பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதை நிறுத்த முடியாது.
வெளிநாடு செல்லும் தொழிலாளர்களின் வருமானம் மூலமே இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைக்கின்றது.
குறைந்த வயதில் பெண்கள் வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புகளுக்கு செல்வதனூடாக , குறைந்த வயதிலேயே அவர்கள் பணம் தேடிக்கொள்ள முடியும்.
வயதெல்லை தொடர்பில் முறையான ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் தான் உட்பட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.