பணிப்பெண்களுக்கு பதிலாக பயிற்சி பெற்ற ஆண் சேவையாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு பெண்களை பணிப்பெண்களாக அனுப்புவதன் ஊடாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி யுள்ளது என்றும், அவற்றை நிவர்த்தி செய்யும் வகையிலேயே இவ்வாறான நடவடிக்கைகள் குறித்துஆலோசிக்கப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, கடந்த காலங்களில்வெளிநாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணியாள்களாக செல்லும் பெண்கள் பல்வேறான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாகியமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன.