இன்று எமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதிகளையும்,சவால்களையும் முகம்
கொடுக்கும் துணிவை இறைவன் கொடுத்துள்ளான் என தெரிவித்துள்ள
கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அரசியலை மக்களின்
விமோசனத்திற்காக பயன்படுத்தாமல் தனிப்பட்ட நோக்கங்களுக்காக
செயற்படுத்துகின்ற போது அது மக்களின் முன்னேற்றத்திற்கு பெரும்
பின்னடைவாகும் என்றும் கூறினார்.
மன்னார் மாவட்டத்தின் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியமடு மஹா
வித்தியாலயத்தில் 90 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நவோதய
கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மடு வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.எம்.குரூஸ் தலைமையில் இடம் பெற்ற இந்த
நிகழ்வில் அவர் மேலும் பேசுகையில் –
இன்று இடம் பெறும் எமது மீள்குடியேற்றம் தொடர்பில் பிழையான விமர்சனங்கள்
எழுந்துள்ளன.முஸ்லிம்கள் பரம்பரையாக வாழ்ந்த பூமியில் வாழ முடியாத
நிலையினை சிலர் உருவாக்க பார்க்கின்றனர்.இவர்கள் தான் கடந்த காலத்தில்
இந்த நாட்டில் இனவாதத்தை தோற்றம் செய்தவர்கள் என்பதை நாம் மறந்துவிட
முடியாது.
1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட பெரியமடு மக்கள் தமது கிராமங்களுக்கு
வந்து தமது காணிகளை சுத்தம் செய்கின்ற போது அவர்கள் புனித பூமிகளை
அழிப்பதாக புதிய புதிய கதைகளை பரப்பி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் சில ஊடகங்கள் அரசியல் வாதிகளின் அபிவிருத்தி
செய்றபாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லாமல்,தனிப்பட்ட நபர்கள்
கூறுகின்ற விடயங்களை பெரிதாக்கியும்,இயலாத்தன்மை கொண்டவர்களின்
கருத்துக்களுக்கு செல்வாக்கை தேடிக் கொடுக்கும் ஒன்றாக அந்த ஊடகங்கள்
செயற்படுகின்றன.
இவ்வாறானதொரு நிலையில் எமது மக்கள் சிறிய சிறிய பிரச்சினைகளை வைத்துக்
கொண்டு அதற்கு தீர்வை கானுகின்ற பணிக்கு முக்கியத்துவமளித்து
செயற்படுவதைவிடுத்து ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்திற்க எதிராகசெயற்படும்
சக்திகளை எவ்வாறு தோற்கடிப்பது என்பது குறித்து ஒன்றுபட வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ,உப்புக்
கூட்டுத்தாபன தலைவர்.எம்.அமீன்,மாந்தை மேற்கு பிரதேச சபை முன்னாள்
உறுப்பினர் நவ்பீல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மாகாண மட்டத்தில் நடன போட்டியில் வெற்றி பெற்ற