Breaking
Mon. Dec 23rd, 2024

மாபெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் 2000ஆம் ஆண்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கதவுகளை மூடிவிட்டு, தேசிய ஐக்கிய முன்னணியை ஸ்தாபித்துவிட்டு சொன்ன விடயம், 2012ஆம் ஆண்டு தேசிய ஐக்கிய முன்னணி தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களுமாய் 40 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறும். அதனூடாக அரசியலமைப்பு மாற்றப்பட்டு சிறுபான்மை சமூகத்தவர் ஒருவர் பிரதமராய் வருவார் என்பதாகும். ஆனால் அவற்றை நிறைவேற்ற தலைவர் இருக்கவில்லை. இதன் அர்த்தம் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸினூடாக தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீனினூடாக நிறைவேறுகிறது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிராந்திய அமைப்பாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான கவிஞர் ரீ.எல்.ஜவ்பர்கான் தெரிவித்தார்.

ஓட்டமாவடியில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அன்று பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் கண்ட சகல இனத்தவரையும் இணைத்து அரசியல் செய்ய வேண்டுமென்பதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நிறைவேற்றி வெற்றிபெற்றுள்ளது. வடக்கில் பெருவாரியான தமிழ் மக்கள், தலைவர் ரிஷாட் அவர்களின் தலைமையை ஏற்றுக்கொண்டு வாக்களித்து 4 உள்ளூராட்சி சபைகளை மக்கள் காங்கிரஸ் கைப்பற்ற முடியுமென்றால் அதுதான் அன்று பெருந்தலைவர் அஸ்ரப் கண்ட கனவு.

ஆகவேதான் பெருந்தலைவர் அஸ்ரப் அவர்கள் விட்ட இடத்திலிருந்து தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் அவர்கள் அரசியல் பயணம் செய்வது சமத்துவ அரசியலின் தோற்றுவாயாக அமைந்துள்ளது. அதே போன்று கிழக்கில் கட்சியின் தவிசாளர் அமீர்அலி அவர்கள் தமிழ் உறவுகளையும் இணைத்துக்கொண்டு அரசியல் செய்வது சமத்துவத்தின் மறுவடிவமாகும்.

இந்த நாட்டு அரசியல் வரலாற்றில், தழிழ் மக்களும் அங்கீகரித்த முதலாவது முஸ்லிம் தலைவராக தலைவர் ரிஷாட் அவர்கள் மாறியுள்ளார் என்பதை யாராலும் எவராலும் மறுக்க முடியாது என்றார்.

Related Post