Breaking
Mon. Dec 23rd, 2024

நாரஹேன்பிட பகுதியில் இருந்து பெருந்தொகையான மதுபான போத்தல்களை கலால் சுற்றிவளைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது, கைப்பற்றியுள்ளனர்.

இதன்படி 60 இலட்சம் ரூபா பெறுமதியான 800 மதுபான போத்தல்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று (17) மாலை, குறித்த பகுதியில் இருந்த வீடொன்று மற்றும் அதன் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை சோதனையிட்ட போது, அதில் மதுபான போத்தல்கள் இருந்துள்ளன.

மேலும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த வேளை, அங்கு இரு வாகனங்கள் வந்துள்ளன. அதிலும் மதுபான போத்தல்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் மூவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கலால் திணைக்களத்தின் சுற்றிவளைப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

By

Related Post