Breaking
Mon. Dec 23rd, 2024

இனிமையான வயோதிபம் என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டு வருகின்ற இன்றைய முதியோர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 எந்தவொரு சமூகத்திலும் முதியவர்கள் மிகவும் பெறுமதி வாய்ந்த மனித வளமாகக் கருதப்படுகின்றனர். அவர்கள் வாழ்க்கை அனுபவங்களினூடாக அறிவைப் பெற்றுக் கொள்கிறார்கள். தொன்மைக்காலம் முதலே கீழைத்தேய மக்கள் முதியவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து அவர்களுக்கு சமூகத்திலும் குடும்பத்திலும் உயர்ந்த ஸ்தானத்தை வழங்கிவந்துள்ளனர். இலங்கையர்கள் தங்களது விரிந்த குடும்ப முறைமையில் முதியவர்களுக்கு ஒரு விசேட இடத்தை வழங்கி அவர்களை குடும்பத்தின் பெருமையாகவும் கருதுகிறார்கள்.

எவ்வாறான போதும் தற்போதைய உலகில் ஏற்பட்டுவரும் நகரமயமாதல் முதியவர் என்ற பாத்திரத்தின் இருப்புக்கு ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது. இன்று பல முதியவர்கள் பழைய வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ள அதே நேரம் பிள்ளைகள் அவர்களது வீடுகளில் இயந்திரங்களாக தங்களது வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர். இத்தகையதொரு சூழலிலேயே இன்றைய சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது.

 இதுபோன்ற ஒரு நாளில் இன்றைய உலகில் முதியவர்கள் எதிர்நோக்கும் துரதிஷ்டவசமான நிலைமைகளைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான தேவையை வலியுறுத்தி ஒரு தேசிய உரையாடல் இடம்பெற வேண்டும். இலங்கைச் சமூகம் தனது கடந்தகால வரலாற்றிலிருந்து பெற்றுக்கொண்ட பெறுமதி வாய்ந்த பண்பாடுகளுக்கமைய ஒரு தீர்வைக் கண்டு அடைவதே இன்றுள்ள சவாலாகும் என அவ்வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post