Breaking
Mon. Dec 23rd, 2024

 – கிஷாந்தன் –

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை நகரத்தை அண்மித்த தரம் 01 முதல் 05 வரையான பாடசாலை ஒன்றில் கணித ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவன் ஒருவனை பேனாவால் தலையில் குத்தியதால் மாணவன் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக மாணவனின் பெற்றோர்  லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

4 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவன் ஒருவனே லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நுவரெலிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட ஆசிரியர் கணித பாடம் கற்பித்துக்கொண்டு இருக்கும்போது மாணவனுக்கு விளக்கம் தெரியாததால் தன்னுடன் அமர்ந்திருந்த மாணவனிடம் விளக்கம் கேட்டதனால் கோபமுற்ற ஆசிரியர் இவ்வாறு தாக்கியுள்ளதாக லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியரை நேற்று (26) மாலை பொலிஸார் கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By

Related Post