Breaking
Mon. Dec 23rd, 2024

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இன்று (17) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழகத்தின் மிருக வைத்திய பீடம் கடந்த 20 தினங்களுக்கு மேல் இயங்காத நிலையில் இருப்பதாகவும் அதற்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மிருக வைத்திய பிரிவு மாணவர்கள் ‘தெய்யொத் தன்னனே’ (கடவுளுக்கும் தெரியாது) என்ற நாடகத்தை பல்கலைக்கழகத்தின் அனுமதியின்றி திறந்த வெளிநாடக அரங்கில் அரங்கேற்றியதும் அதன் மூலம் பெறப்பட்ட பணம் தொடர்பாகவும் ஏற்பட்ட சர்ச்சையே இவ்வாறு மிருக வைத்திய பீடம் ஸ்தம்பிதம்அடையக் காரணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நாடகத்தின் மூலம் பெறப்பட்ட பல இலட்சம் ரூபாய்கள் மர்மமாக மறைந்துள்ளதாகவும் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.

இப்பிரச்சினை தொடர்பாக கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை நிவர்த்திக்கும் படியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

By

Related Post