Breaking
Fri. Nov 15th, 2024
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 3 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்த மோதல் சம்பவம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பேராதனை பல்கலைக்fழக இணைந்த சுகாதார கல்விப் பீட சிரேஷ்ட மாணவர்கள் சிலருக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலருக்குமிடையே  இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் 12 க்கும் மேற்பட்ட மொழிபேசும் மாணவர்கள் காயமடைந்த போதும் 5 மாணவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 21 ஆம் திகதி சிரேஷ்ட மாணவர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடுசெய்திருந்தனர்.
இந்த ஒன்றுகூடலுக்கு (தமிழ், முஸ்லிம்) மாணவர்கள், மாணவிகள் கரங்களை பற்றிக் கொண்டு ஜோடியாக வரவேண்டும் என கூறப்பட்டதால்  இக்கருத்துடன் முரண்பட்ட தமிழ், முஸ்லிம் மாணவர்கள் அந்த ஒன்றுகூடலுக்கு செல்வதை தவிர்த்துள்ளனர்.
இதன் காரணமாகவே  இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது என நான் அறிகின்றேன்.
சில மாணவர் குழுக்கள் தங்கள் ஆதிக்கங்களை செலுத்த முற்படுவது வழமையான ஒன்றே. எனினும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்ய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பேராதனை பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விசாரணைகளின் பின்னர் தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் உபவேந்தர் மேலும் தெரிவித்தார்.

By

Related Post