Breaking
Mon. Dec 23rd, 2024

அகதியாக வந்து தற்போது அதிதியாக நமது மனங்களில் வீற்றிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தற்போது பௌத்த பேரினவாதிகளுடன் மட்டுமல்லாது மற்றவர்களுடனும் போராடவேண்டியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான எம்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஸ்மார்ட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வு அவ்அமைப்பின் தலைவர் கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் தலைமையில் மாளிகைக்காடு விஸ்மில்லா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புலிகளால் துரத்தப்பட்டபோது எவ்வாறு பழைய ரீ சேட்டுடனும் சாரனுடனும் மன்னாரில் இருந்து புத்தளத்துக்கு வந்தாரோ அந்த நிலவரத்திலே இருக்கிற மக்களின் கல்வி விடயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தேசியத்திலே பௌத்த பேரினவாதிகளுடன் மட்டுமல்லாது மற்றவர்களுடனும் போராடவேண்டிய நிலையில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் இருப்பதாக தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் இருந்தது போன்று இந்த அரசாங்கத்திலும் பௌத்த பேரினவாதிகளின் தாக்கம் இருப்பதாகவும் ஆட்கள் தான் மாறியிருக்கிறதே தவிர சண்டைப்பயிற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்றும், மகிந்த ராஜபக்சவை எதற்காக துரத்தினோம் என்று தெரியாமல் பேசிக்கொண்டிருப்பவர்களும் இப்போதும் இருக்கிறார்கள். என்றும் கடந்த ஆட்சியில் காணப்பட்ட பேரினவாதிகளின் எச்ச சொச்சங்கள் இப்போதும் அதிகார மட்டத்திலும் பாராளமன்றத்திலும் இருப்பதாகவும் தெரிவித்தார்.

சிறுபான்மையினருக்கு அநீதியிளைத்த ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து செயற்படும் அரசாங்கத்துக்குள் தற்போது இருப்பதாகவும் எனவே மிகுந்த அவதானத்துடன் தங்களது காரியங்களை றவூப் ஹக்கீம் உட்பட சிறுபான்மை தலைமைகள் ஆற்றவேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே தற்போது உருவாகியுள்ள புதிய அரசியல் கலாச்சாரம் எவ்வளவு தூரத்துக்கு நன்மை பயக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியுள்ளதாகவும், எங்களுக்கு கிடைத்துள்ள இடைக்கால நன்மை என்றால் அது, மகிந்த ராஜபக்ச இல்லை என்பது மட்டும்தான் பொதுபல சேனாக்கள் மற்றைய சேனாக்கள் அழிந்துவிட்டார்கள் என்று பொருள் அல்ல என்றும் தெரிவித்தார்.

கடந்த தேர்தல் காலங்களில் தன்னால் முன்வைக்கப்பட்ட கருத்து ஒன்று, அரசியல் தலைவர்கள் தீர்மானிப்பதற்கு முன்பாக மக்கள் எடுத்துள்ள முடிவு எதிர்காலத்திலே அது பிழையாகிப்போய்விடுமா? என்கிற விடயம் எதிர்கால அரசியலிலே தான் சொல்லவேண்டிய ஒரு விடயம் என்று கூறியிருந்ததாகவும் எனவே அந்தகாலம் வந்துவிட்டதே என்ற சந்தேகம் தன்னிடம் இருப்பதாகவும் இது ஒரு சவால் மிக்க காலம் என்றும் தெரிவித்தார்.

நிகழ்வில் வீ.எம்.ஆஸிக் உரையாற்றியதுடன், அஷ்ஷெய்க் எஸ்.ஏ.எம்.ஜினான் றமழான் சிந்தனை வழங்கினார். கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி உள்ளிட்ட கட்சியின் பிரமுகர்களும் அமைப்பின் அங்கத்தினர்களும் பிரதேச இளைஞசர்களும் பண்குகொண்டிருன்தது குறிப்பிடத்தக்கது.

am-3.jpg2_-3.jpg3_-3 am-1

By

Related Post