பேருவளை சைனாபோட் என்ற இடத்தில் வைத்து சந்திரிக்காவும் மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்காவும் பங்கேற்ற நிகழ்வு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், குறித்த இடத்தில் நின்ற விசேட அதிரடிப்படை வீரர்கள் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. இது தொடர்பில் சந்திரிக்காவின் சட்டத்தரணிகள், பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அத்துடன் பேருவளை பொலிஸுக்கு அறிவிக்கப்பட்டபோதும் அவர்களும் கலகக்காரர்களை அடக்க முயற்சிக்கவில்லை என்று சந்திரிக்காவின் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.