சவுதி அரேபியாவில் பேஷன் ஷோக்கள் நடத்துவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.சமீப காலமாக சவுதி அரசின் வர்த்தக அமைப்பிடம் உரிய அனுமதி பெறாமல் நிறுவனங்களும் வடிவமைப்பாளர்களும் தங்கள் பொருட்களை அறிமுகப்படுத்தவும், விற்பனையை பெருக்கவும் பேஷன் ஷோக்களை நடத்துவதாக புகார்கள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், இந்த முடிவு நிறுவனங்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் பாதித்துள்ளது மட்டும் அல்லாமல் பேஷன் ஷோக்களில் பூனை நடைபோட்ட சவுதி ஆண் மாடல்களை கடுமையான வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுபற்றி ஆண் மாடல் ஒருவர் கூறும்போது ‘‘மாடலிங் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல, என்னுடைய தொழிலும் கூட. பேஷன் ஷோக்கள் எங்கள் நாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் புதிய விஷயம். ஆனால் மக்களிடம் நல்ல ஆதரவு இருந்தது” என தெரிவித்துள்ளார்.