Breaking
Wed. Mar 19th, 2025

பேஸ்புக் சமூக வலைத்தளத்தினூடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அச்சுறுத்திய சந்தேக நபர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் வீசா இல்லாமல்  மலேசியாவிற்குச் சென்று அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் நேற்று இலங்கை வந்த போது  கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர் யக்கலை பிரதேசத்தைச் சேர்ந்தவராவர். சந்தேக நபர் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post