Breaking
Sun. Dec 22nd, 2024

பேஸ்புக்கில் உங்கள் நண்பர்களிடமிருந்து நோட்டிபிகேஷன் வந்தால் அது வைரஸாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகில் இன்று அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் சமூகவலைதளமாகவுள்ள பேஸ்புகில் கருத்துகள், புகைப்படங்கள் மற்றும் செய்திகள் உலக அளவில் உடனுக்குடன் பதிவிடப்படுகின்றன.

ஆனால் இதுவே ஹேக்கர்களுக்கு வசதியாகவும் அமைந்துள்ளது.

பேஸ்புக்கில் பகிரப்படும் செய்திகள் மூலம், புகைப்படங்கள் வாயிலாக வைரஸ்கள் அதிகமாக பரவிவருகின்றன.

நண்பர்கள் பெயரில் நம் பக்கத்திற்கு வரும் நோட்டிபிகேஷன்களால் நமது மடிக்கணனி, கையடக்கதொலைபேசி மற்றும் கணனிகளுக்கு வைரஸ்கள் பரவுகின்றன.

புகைப்படங்கள் மூலம் வரும் அறிவிப்புகளால் மல்வேயர் நீங்கள் பயன்படுத்தும் கணனிக்கு உடனடியாக தரவிறக்கம் ஆகிறது. இதனை கிளிக் செய்வதன் மூலம் வைரஸ் ஆக்டிவேட் ஆகிறது. குரோம் மட்டுமல்லாமல், எட்ஜ், பயர் பொக்ஸ், சபாரி, ஒபேரா மூலம் இந்தவகை வைரஸ்கள் பரவுகின்றன.

அதனால் உங்கள் வரும் நோட்டி பிகேஷன்களை கவனமாக கையாள வேண்டும். இந்த பிரச்சினை தீர்க்கப்படும் வரை நண்பர்களிடமிருந்து நோட்டிபிகேஷன் வந்தால் அதை கவனமாக கையாள வேண்டும். அதனை கிளிக் செய்யாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது.

By

Related Post