பேஸ்புக் மூலம் கிளர்ச்சியைத் தூண்டி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த சர்வதேச சக்திகள் முயற்சித்து வருவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் சிங்கள வாக்குகளை சிதைவடையச் செய்ய மேற்குலக நாடுகள் முயற்சித்து வருகிறது. ரணில் விக்ரமசிங்க, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் மாதுலுவே சோபித தேரர் ஆகிய பலரும் தேர்தலில் போட்டியிட்டு வாக்குகள் சிதைக்கப்படுவதனையே விரும்புகிறது.
சிங்கள வாக்குகளை சிதைப்பதன் மூலம் அறுதிப் பெரும்பான்மையுடன் எவரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டார் மாட்டார்கள் எனவும் இதனையே மேற்குலக நாடுகள் விரும்புகிறது. என அவர் குற்றஞ்சாடிட்டியுள்ளார்.
பேஸ் புக் மற்றும் பல்வேறு சமூக வலையமைப்பைப் பயன்படுத்தி நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருகிறது.சில மேற்குல நாடுகள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் ரணில் விக்ரமசிங்க கூட 50 வீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்றுக் கொள்வதனை மேற்குலக நாடுகள் விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார். (OU)