Breaking
Mon. Mar 17th, 2025

பேஸ்புக் தன்னுடைய லோகோவில் மாற்றம் செய்துள்ளது. 24 மணி நேரமும் பேஸ்புக்கே கதியாக கிடந்தாலும் நாம் லோகோ மாற்றத்தை கவனித்திருக்க மாட்டோம் என்பதால், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு இங்கு படம் வரைந்து பாகங்களின் குறிப்புடன் செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயன் பெறுக!

facebook என்ற எழுத்துகளில் மிகச் சிறிய அளவில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழுத்தின் அளவு ஏறக்குறைய ஒரே அளவாக உள்ளது. அதேசமயம் மொத்த அளவு சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. a, e, b, o எழுத்துகள் உள்ளே இருக்கும் இடைவெளி வட்டமாக மாற்றப்பட்டுள்ளது. முக்கியமாக a முழுமையாக மாற்றப்பட்டுள்ளது.

பேஸ்புக் கிரியேட்டிவ் இயக்குனர் ஜோஷ் ஹிக்கின்ஸ் இது பற்றி கூறுகையில் “பார்க்க இனிமையாகவும் மற்றும் அணுகக்கூடிய வகையிலும் இருக்கும்படியாக புதிய லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளதாக”  தெரிவித்துள்ளார்.

Related Post