Breaking
Sun. Dec 22nd, 2024

பொறுமை,தியாகத்துடனான அர்ப்பணிப்பு, தேசப்பற்று, இன ஐக்கியத்துடன் கூடிய ஆத்மார்த்த நட்பு, சமூக ஒத்துழைப்பு வளர்ச்சி கண்டு, நாட்டின் சுபீட்சம் மேலும் அபிவிருத்தியடைந்து, எமது தாய்திருநாட்டில் முஸ்லிம் மக்களுக்கெதிரான சதிமுயற்சிகள் முறியடிக்கப்பட்டு, அவை முற்றாக இல்லாதொழிந்து அனைத்து இன மக்களினதும் தனித்துவம் பேணப்பட்டு,உடன்பாடான மாற்றங்களுடன் இலங்கையர் அனைவரும் அச்சமின்ற,மனச்சஞ்சலமின்றி சுதந்திரத்துடன் வாழ வேண்டுமென்ற துஆவினை வல்ல இறைவனிடம் வேண்டி நிற்கின்றேன்.

அத்தோடு எல்லாம் வல்ல அல்லாஹ் ஏதோ ஒரு வழியில் எங்களுக்கு தந்துள்ளதனை வைத்து நாங்கள் நோன்புகளை நோற்று புனித நோன்பு பெரு நாளினையும் கொண்டாட உள்ள இந்த நிலையில் சிரியா, பலஸ்தீன், ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் உள்ள எங்களுடைய சகோதரர்கள் மேற்குல சூழ்ச்சிக்குள் அகப்பட்டு நாளுக்கு நள் தங்களது உயிர்களை பலிகொடுத்து வருக்கின்றனர்.

அதுமட்டுமல்லமல் நோன்பு திறப்பதற்கு கூட ஒரு பேரீத்தம் பழம் இல்லாத நிலையிலேயே அங்கு எமது சகோதரர்கள் முற்பது நோன்பினையும் பிடித்து பெருநாளினையும் எதிர்பார்த்து நிற்கின்றனர்.

ஆகவே அவர்களுக்காக நாம் அணைவரும் பிரார்த்திப்பதோடு கண்ணியமிக்க இப்புனித திருநாளின் மகிழ்ச்சியை நாட்டு மக்கள்அனைவருடனும் பகிர்ந்து கொள்வதுடன் முஸ்லிம் சகோதரர்கள் அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்தினை தெர்வித்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாக மேல்மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜி தெரிவித்தார்

By

Related Post