கிராண்ட்பாஸ் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போதைப் பொருள் விநியோகம் செய்துவந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ‘பொடி சூட்டி’ என்பவரை கொழும்பு துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்டவின் கீழுள்ள துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு முன்னெடுத்த விசேட நடவடிக்கை ஒன்றின் போதே 20500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபரான குறித்த பெண் ஸ்டேட் வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட குறித்த பெண் கிராண்ட்பாஸ், ஸ்டேட் புர பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனவும் கடந்த 10 வருடங்களாக போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வருபவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந் நிலையில் கைதான ‘பொடிசூட்டி’ என அறியப்படும் குறித்த சந்தேகநபரை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தியுள்ள பொலிஸார் 7 நாள் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுக்கொண்டு தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெ டுத்துள்ளனர்.