Breaking
Fri. Dec 27th, 2024

இலங்கை போர்ச் சூழலில் இருந்து விடு­பட்டும் பொரு­ளா­தார நிலையில் இன்னும் பின்­தங்­கிய நிலை­யி­லேயே உள்­ளது. ஒன்­று­பட்ட நாட்­டினுள் சமூக, பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­யினை வென்­றெ­டுக்க வேண்­டு ­மாயின் அனைத்து கட்­சி­க­ளி­னதும் புரிந்­து­ணர்வும் ஒற்­று­மையும் அவ­சியம் என பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார். பாரா­ளு­மன்ற தேர்­தலின் பின்­னரும் அனைத்து கட்­சி­களும் ஒன்­றி­ணைந்த தேசிய அர­சாங்­கத்­தி­னையே கட்­டி­யெ­ழுப்ப வேண்டும்.

மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க தேசிய அரசே ஒரேவழி எனவும் பிர­தமர் தெரி­வித்தார்.சக்­தி­யினால் வலுப்­பெறும் இலங்கை எனும் தொனிப்­பொ­ருளில் மின்­சக்தி, எரி­சக்தி அமைச்­சினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்­துக்­கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,

ஒரு நாடு பொரு­ளா­தார ரீதி­யிலும் சமூ­க­ரீ­தி­யிலும் வளர்ச்­சி­ய­டைய வேண்­டு­மாயின் அந்­நாட்டில் உணவு, நீர் ஆகிய இரு பிர­தான கார­ணி­கலும் வலுப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இன்­றைய 21 வது நூற்­றாண்டில் உணவு, நீர் ஆகிய கார­ணி­க­ளுக்கு அப்பால் மின்­வலு பிர­தான அங்கம் வகிக்­கின்­றது. உலகின் அனைத்து நாடு­களும் மின்­வ­லு­வினை வலுப்­ப­டுத்­திக்­கொள்­வ­தி­லேயே அக்­கறை செலுத்­து­கின்­றன. மின்­வ­லு­வுடன் தொடர்­பு­டைய எரி­பொருள் இன்று உல­கத்­தினை தீர்­மா­னிக்­கின்­றது. அதன் கார­ணத்­தி­னா­லேயே அமெ­ரிக்கா போன்ற நாடுகள் எரி­பொ­ருளை தன்­வசம் சைத்­துக்­கொள்ள மத்­திய கிழக்கு நாடு­களை தமது கட்­டுப்­பாட்­டினுள் வைத்­துள்­ளன. மத்­திய கிழக்கு நாடு­க­ளுடன் அர­சியல் ரீதி­யிலும் அடக்கு முறை மூல­மா­கவும் தொடர்­பு­களை வைத்­தி­ருக்­கின்­ற­தற்­கான ஒரே காரணம் எண்ணெய் வளத்­தினை பெற்­றுக்­கொள்­வதேயாகும்.

இந்­நி­லையில் இலங்கை கடந்த காலங்­களில் பொரு­ளா­தார ரீதி­யிலும் அபி­வி­ருத்தி மட்­டத்­திலும் தனி­நபர் பொரு­ளா­தார வளர்ச்­சி­யிலும் பின்­தங்­கியே இருந்­தது. இன்று அதன் தாக்கம் உள்­ளது. எனினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் எம் அனை­வ­ரி­னதும் இணைப்பில் இன்று நாட்டில் மாற்றம் ஒன்­றினை ஏற்­ப­டுத்தும் முயற்­சி­யினை எடுத்­துள்ளோம். நாட்­டினை சிறப்­பா­ன­தொரு பாதையில் கொண்டு செல்ல நாம் ஒன்­றி­ணைய வேண்டும். அதன் முதற்­கட்­டத்தில் நாம் தேசிய அர­சாக வெற்றி கண்­டுள்ளோம். அனைத்து கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து ஏற்­பட்ட மாற்­றத்தின் மூலம் மக்கள் உண­ரக்­கூ­டிய வகையில் பொரு­ளா­தார சலு­கை­களை வழங்­கி­யி­ருக்­கின்றோம்.

அதேபோல் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் வளர்ச்­சி­யினை ஏற்­ப­டுத்தி நாட்­டி­னையும் சமூ­கத்­தி­னையும் மேம்­ப­டுத்த வேண்­டு­மாயின் அடுத்த பாரா­ளு­மன்­றத்­தி­னையும் அனைத்து கட்­சி­களின் கூட்டு ஆத­ர­வுடன் அமைத்­துக்­கொள்ள வேண்டும். நாட்டின் பொரு­ளா­தார சிக்­கல்­க­ளுக்கும் மக்கள் பிரச்­சி­னைக்கும் ஒரே தீர்வு தேசிய அர­சாங்­கமே. அதனை ஏற்­ப­டுத்­து­வது தொடர்பில் சகல கட்­சி­க­ளுமே தீர்­மா­ன­மெ­டுக்க வேண்டும். நாம் ஆரம்­பத்­தி­ருக்கும் தேசிய அரசின் ஊடாக ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி, ஐக்­கிய தேசியக் கட்சி ஆகிய கட்­சி­களின் ஒன்­றி­ணைப்பு நல்­ல­தொரு வெற்­றிப்­பா­தை­யினை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர வேண்டிய தேவை உள்ளது.

யுத்தம் முடிவடைந்து நாட்டில் பயங்கரவாதம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டிருந்தம் நாட்டின் தேவையான அபிவிருத்தி எவையும் இடம்பெறவில்லை. நாட்டினை பாதுகாப்பான பாதையில் கொண்டு செல்வதாயின் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

-VK-

Related Post