பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட சிலர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்கு எதிரில் நடந்து கொண்ட விதம் குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து பார்க்குமாறு ஹோமாகம நீதவான், மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை முன்வைத்துள்ள நீதவான், சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்நேலியகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, எக்நேலியகொடவின் மனைவிக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் ஞானசார தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை அடுத்து பிக்குமார் சிலர் ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதுடன் நீதிமன்றத்திற்கும் சேதம் ஏற்படுத்தியிருந்தனர்.