(கட்டாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா)
முஸ்லிம்கள் தொடர்பில் பிழையான கருத்துக்களை பகிரங்கமாக கூறிவரும் பொதுபலசேனா இன்னும் அதனது பாதையில் இருந்து விலகியதாக தெரியவில்லை.காலத்திற்கு ஏற்ற விடயங்களை இனம் கண்டு அதனை வைத்து இலங்கையில் வாழும் பௌத்த மக்களையும் ,ஏனையச சமூகத்தினரையும் முஸ்லிம்களுக்கு எதிராக துாண்டி அதன் மூலம் வெளிநாட்டு நிதியினை பெற்றுகொள்ளும் இந்த அமைப்பு மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏற ஆரம்பித்திருக்கின்ற கதையாக மாறிவருகின்றது.
இலங்கையில் உள்ள சில முஸ்லிம் ஹஜ் முகவர்கள் பொதுபலசேனா அமைப்பிடம் உதவி கோறி சென்றது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகிவருகின்றன.அதே போல் மீண்டும் வடக்கில் இருந்து வெளியேற்ப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பிலும்,அந்த முஸ்லிம்களினதும்,ஏனைய சமூகங்களினதும் தேவைகளை இனம் கண்டு அவற்றை பெற்றுக் கொடுக்கும் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஆட்படுத்தியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பிலும் பிழையான அனுமுறைகளை பொதுபலசேனா மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.
வடக்கில் குறிப்பாக மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் வாழந்து 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக இனச் சுத்திகரிப்புக்குள்ளான முஸ்லிம் மக்கள் மீண்டும் 20 வருடங்களின் பின்னர் தமது தாயகத்திற்கு வந்து அவர்களது காணிகளில் குடிசை அமைத்து வாழ்கின்ற போது அவர்களுககு எதிராக செயற்பட்ட சக்திகள் மௌனித்து இருக்கின்ற நிலையில் பொதுபலசேனா என்கின்ற இனவாத அமைப்பினர் அமைச்சர் றிசாத் பதியுதீன் 18 ஆயிரம் ஏக்கர் காணிகளை தமது சொந்த தேவைக்காக கையகப்படுத்தியுள்ளதாக ஊடக மாநாடொன்றில் தெரிவித்த கருத்து தொடர்பில் சில தெளிவுகளை வழங்க வேண்டியுள்ளது.
அமைச்சர் றிசாத் பதியுதீனை பொருத்த வரையில் அவர் வடமாகாணத்தில் வன்னி மாவட்டத்தில் மன்னார் மாவட்டத்தினை பிறப்பிடமாக கொண்ட ஒருவர்.அரசியலுக்கு விருப்பத்துடன் வந்தவர் அல்ல அன்று முஸ்லிம்களுக்கு விடுதலைப் புலிகளினால் ஏற்படுத்தப்பட்ட துன்பங்களையும்,துயரங்களை அறிந்ததுடன்,அதனை அனுபவித்தவர்களில் றிசாத் பதியுதீனும் குறிப்பிட்டுக் கூறக் கூடியவர்.அதன் பின்பற்பாடு அரசிலுக்கு வலிந்து இழுக்கப்பட்ட நிலையில் அவரது அரசியல் பிரவேசம்,அவர் எதிர் கொள்ளும் சவால்கள்,அதற்கு முகம் கொடுக்கும் தையரியம் என்பன இன்றைய அரசியல் வாதிகளினால் புடம் போட்டு பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக வடக்குக்கு மட்டுமல்லாமல் தேவையுணர்ந்து,பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதும்,அவர்களுக்காக உரிமை குரல் கொடுப்படுதும்,அதன் மூலம் பாதிக்கப்படும் சமூகத்திற்கு ஓரளவு மன ஆறுதலை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் ஆறுதல் அடையும் அரசியல் வாதியாக அமைச்சர் றிசாத் பதியுதீனை இங்கு நோக்கலாம்.தாம் பிரதி நிதித்துவப்படுத்தும் வடக்கு மாகாணத்தில் வாழும்,தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் என்ற பேதமின்ற பணியாற்றிவரும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பில் கடந்த காலங்களில் தமிழ் கட்சிகள் கடும் போக்குடன் நடந்து கொண்ட போது வடக்கில் வாழ்ந்தவரும் சில தமிழ் அரசியல் தலைவர்களும்,தமிழ் மக்களும் அவரின் பணியின் நேர்மைத் தன்மையினை பேசியதையும் நாம் இங்கு ஞாபகப்படுத்துவது பொருத்தமாகும்.
முற்றத்து மல்லிகை மனக்காது என்ற பழமொழிக்கொப்ப வன்னி மாவட்ட மக்களின் அரசியல் பலமாக இருக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீனை அரசியல் ரீதியாக இல்லாமல் செய்யும் வியாபாரங்களும் இமடம் பெறாமலில்லை.வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் என்ற வகையில் மாவட்ட அபிவிருத்தி உள்ளிட்ட எத்தனையோ திட்டங்களை நடை முறைக்கு கொண்டுவந்து அவற்றை நேரடியாக மக்களுக்கு கொண்டு செல்வதை தாங்கிக் கொள்ள முடியாது வங்குரோத்து அரசியல் வாதிகள்,அமைச்சர் றிசாத் பதியுதீனை தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்ற ஒரு மாயை ஏற்படுத்தினர்.துரதிஷ்டம் வடக்கில் துன்பங்கைள யார் ஏற்படுத்தினார்கள்,அவர்களின் நிழலில் யார் அரசியல் செய்தார்கள் என்பதை அறிந்து கொண்ட மக்கள் அமைச்சர் றிசாதின் பணிகளை பாராட்டினர்.அவர்் மூலம் எத்தனையோ நன்மைகளை பெற்றுக் கொண்டனர்.அதற்கு நன்றியும் பாராட்வருகின்றனர்.இந்த வரலாற்றுப் பி்ன்னணி இருக்கையில் ஒரு தனி அரசியல்வாதி வடக்கி்ல் 18 ஆயிரம் ஏக்கர் காணியினை தமது சொந்த தேவைக்கு பெற்றுள்ளார் என்று பொருப்பற்ற பொதுபலசேனா ஊடக மாநாடுகளிலும்,தொலைக்காட்சி விவாதங்களிலும் கர்ச்சிப்பது கைாவெறும் வேடிக்கையானது.
இலங்கை அரசாங்கத்தின் காணி தொடர்பான சட்டங்கள் தெரியாத பொதுபலசேனா யாரோ சொல்லிக் கொடுப்பதை கிளிப் பிள்ளை போன்று கூறுவது கண் இருந்தும் குருடர்களாக இருக்கின்ற நிலையினையே பார்க்க முடிகின்றது.வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்புக்கு உள்ளான முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இன்னும் முற்றுப் பெறாத நி்லையில் அவர்களுக்கு தேவையான எத்தனையோ அடிப்படை வசதிகள் கிடைக்காத துயரத்தில் இருப்பத்கு ஒரு இல்லறததை அமைக்க வெளிநாடுகளுக்கு சென்றும்,ஒவ்வொரு துாதரங்களுக்கு சென்று உதவி கோறும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பில் தற்போது புதியதொரு கதையினை இந்த பொதுபலசேனா கட்டவிழ்த்துவிட்டுவருகின்றது.
எது எவ்வாறாக இருந்தாலும் வடக்கில் வாழ்ந்த மக்கள் அவர்களது பிரதேசங்களில் நிம்மதியாக வேறு எந்த சக்திகளினதும்,அடக்கு முறைகளுக்கு உட்படாது வாழ வேண்டும் என்ற விடயத்தில் அமைச்சரின் செயற்பாடு வெளிச்சம் போட்டுகாட்டிவருகின்றது.
எனவே பொதுபல சேனா போன்ற இன்னும் எத்தனையோ இனவாத சித்தாந்தங்களை தமது மூச்சாக கொண்டு செயற்படும் கட்சிகளும்,அமைப்புக்களும், என் தனிப்பட்டவர்களும் ஒன்றினைந்து இல்லாத பொல்லாதவற்றையெல்லாம் கூறி மக்களுக்கான அபிவிருத்திகளையும்,சலுகைகளையும்,உரிமைகளையும் பறிப்பதற்கு எத்தனிக்கும் தளத்திற்கு ஒரு போதும் எமது மக்கள் துணைப்போகமாட்டார்கள்.