Breaking
Thu. Jan 16th, 2025

‘பொது பல சேனா முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம் சமய ஸ்தாபனங்கள் மீதும். விடுத்திருக்கின்ற அச்சுறுத்தல்களை வன்மையாக கண்டிப்பதோடு முஸ்லிம் சமூகம் அஞ்சியும் கெஞ்சியும் ஒரு  போதும் வாழவுமில்லை  அவ்வாறு வாழப்போவதுமில்லை’ என்பதை மிகத்தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றோம்.

யுத்தம் நடைபெற்ற காலங்களில் எங்கே இருந்தார்கள் என்றே தெரியாத ஒரு கூட்டம் யுத்தம் நிறைவடைந்ததும், ஏதோ வீராதி வீரர்கள் போன்று வெளியில் வந்து கடந்த 02 வருடங்களாக முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்திகொண்டு இருக்கின்றார்கள்.

நாட்டின் அமைதியின்மையில் ஆதாயம் தேடும் சில சக்திகளின் கைகூலிகளாக மீண்டும் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்காக ஆரம்பத்தில் அடையாளம் தெரியாதவர்களாக பள்ளிவாசல்களுக்கு கல்லெறிந்து தமது அடாவடித்தனத்தை ஆரம்பித்தார்கள். பின்னர் ‘ஹலால்’ கோஷத்துடன் வெளியில் வந்தார்கள்.

முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டி அவர்களை களத்தில் இறக்கி       பயங்கரவாதிகளாக காட்டி தம் இலக்கை நோக்கி பயணிப்பதற்காக 11.000 முஸ்லிம் வாலிபர்கள் பாகிஸ்தானில் ஆயுதப்பயிற்சி பெற்று வந்திருப்பதாகவும்இ மறைந்த தலைவர் அஷ்ரப் இரண்டு கொள்கலன்களின் ஆயுதம் கொண்டு வந்திருந்ததாகவும்இ பொய்களை கட்டவழித்தார்கள் ஏனெனில் எவ்வாறாவது முஸ்லிம் வாலிபர்களை விரக்தியின் விளிம்பிற்குள் தள்ளி அவர்களை ஆயுதம் ஏந்த வைத்து இதைதான் நாம் முன்கூட்டியே கூறினோம் என்று ஒரு படம் காட்ட நினைத்தார்கள். ஆனாலும் முஸ்லிம்கள் சமாதானத்தை நேசிக்கின்ற சமூகம் என்ற வகையில் பொறுமையாக நிதானமாக விஷயங்களை அணுகினார்கள்.

இதனால் விரக்தியடைந்த பொது பல சேனா முஸ்லிம்களின் உணர்வுகளை மீண்டும் தூண்டுவதற்கு புனித அல்குர்ஆனை பற்றியே பொய்களை இட்டுக்கட்டினார்கள். மேலும் பெண்களின் கௌரவமான ஆடைகளை விமர்சித்தார்கள். பெண்களின் ஆடைகளை விமர்சிக்கும் துறவிகளை முதல் தடவையாக இலங்கையில் கண்டோம். இவை எதன் மூலமாகவும் தங்கள் இலக்கை அடையமுடியாமல் போன பொது பல சேனா அளுத்கம, பேருவளை போன்ற பிரதேசங்களில் தங்கள் அடாவடித்தனங்களை அரங்கேற்றினார்கள்.

இதனால் முழுநாடும் சர்வதேசத்தின் முன் தலை குனிந்து நிற்கிறது. இருப்பினும் பொது பல சேனாவுக்கு எதைபற்றியும் கவலையில்லை. பொய்யை முதலீடாகக் கொண்டு தன் இலக்கை அடைவதில் மாத்திரம் குறியாக இருக்கிறது.

இந்த பின்னனியில் தான் தனக்கு வலு சேர்ப்பதற்காக மியன்மாரில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு காரணகர்த்தாவாக முழு சர்வதேசத்தாலும் அடையாளங் காணப்பட்ட அசின் விராது தேருடன் கைகோர்த்து இருக்கின்றார்கள். இரு நாடுகளினதும் முஸ்லிம்களின் கொலைகளின் காரணகரத்தாக்கள் கைக்கோர்த்திருப்பது ஆச்சரியமான விடயமல்ல. ஆனால் தீவிரவாதிகள் நல்லவர்களை தீவிரவாதிகள் என்பதும் சமாதானத்தின் எதிரிகள் சமாதானம் பற்றி பிரலாகிப்பதும், கொலைகாரர்கள் தங்களுக்காக யாரும் பேசுகிறார்கள் இல்லையே என்று புலம்புவதும் தான் புதுமையாகும்.

அன்று வடகிழக்கு முஸ்லிம்கள் நாட்டின் ஒருமைப்பாட்டை மதித்து பிரபாகரனுடன் ஒத்துழைக்க மறுத்ததனால் பல உயிர்களையும் இசொத்துக்களையும், வாழ்விடங்களையும் இழந்தார்கள். அவ்வாறான சமுதாயத்துக்கு நன்றி கடனாக யுத்தம் முடிந்ததும் அதன் உணர்வுகளை குத்தி குதறிக்கொண்டு இருக்கின்றார்கள்.

அநீதியையும் அக்கிறமத்தையும் தடுத்து நீதியையும் சமாதானத்தையும் போதித்த புத்தரின் பெயரை கூறிக்கொண்டு இந்த கூட்டம் அநியாயத்தையும் அக்கிரமத்தையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது ஆனால் ‘அதர்மம் என்றும் அழிந்தே தீரும்’ என்பதை இவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளட்டும்

Y.L.S ஹமீட்
செயலாளர் நாயகம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

Related Post