Breaking
Sun. Dec 22nd, 2024

பொதுபலசேனா அமைப்பின் பேஸ்புக் பக்கம் இன்று முதல் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது என அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

பேஸ்புக் நிர்வாகத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை அடுத்து பொதுபலசேனா அமைப்பின பேஸ்புக் பக்கம் கடந்த ஜுன் மாதம் முதல் பேஸ்புக் நிர்வாகத்தினால் அகற்றப்பட்டது.

குறித்த சமயத்தில் பொதுபலசேனா அமைப்பின் பேஸ்புக் பக்கத்திற்கு 10,000 விருப்பங்களும் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார  தேரரின் பேஸ்புக் பக்கத்திற்கு 15,000 விருப்பங்களும் கிடைக்கப் பெற்றிருந்தன.

இந்த நிலையிலேயே குறித்த இரண்டு பேஸ்புக் பக்கங்களும் அகற்றப்பட்டன. எனினும் பொதுபலசேனா அமைப்பின் புதிய பேஸ்புக் பக்கமொன்று இன்று காலை 8 மணி முதல் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post