மரைக்கார் தீவு மக்களின் அவல நிலையினை நேரில் கண்ட ஊடகவியாளார்கள் சில ஊடகவியாளர்கள் கண்கலங்கின நிலையில் சர்வதேச மட்டத்தில் பேசப்படும் ஒரு விடயமாக மன்னார் மரைக்கார் தீவு மக்களின் காணி பிரச்சினை உள்ளது.
மீள்குடியேறும் இந்த மக்கள் வில்பத்து சரணாலயத்தில் காடுகளை அழித்து வில்பத்துகு உரிய காணியில் விடுகளை அமைத்து வருகின்றார் இவர்களின் நடவடிக்கையினை தடை செய்ய வேண்டும். என பொதுபல சேனா என்ற அமைப்பினால் பல விதமாக கருத்துக்களை முன் வைக்கின்றார்கள் மக்களின் உண்மை நிலைதான் என்ன? பொதுபல சேனா அமைப்பு உண்மைதான் சொல்கின்றார்களாக இல்லை முஸ்லிம் மக்களின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாகதான் இப்படி நடந்துள்ளார்களாக என்ற உண்மையினை வெளிகொண்டு வரும் நோக்குடன் இலங்கையில் உள்ள ஊடக நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 60 மேற்பட்ட ஊடகவியாளர்கள் நேரடியான கல ஆய்வினை இன்று மரைக்கார் தீவுக்கு மேற்கொண்டார்கள்.
ஊடகவியலாளர்களிடம் மக்கள் தெரிவிக்கையில் இந்த காணியில் நாங்கள் பல வருடகாலமாக வசித்தோம் மரணிக்கும் வரையிலும் நாங்கள் இந்த காணியினை வீட்டு போகமாட்டோம் நீங்கள் பாருங்கள் அங்கே தான் என்னுடைய கணவன் அடக்கம் செய்யப்பட்டார் அந்த காணியினையும் கடற்படையினர் அவர்களின் தளங்களை விஸ்தரிப்பதற்கு பயன்படுத்துகின்றார்.
சென்று பார்த்தால் முதாயர்கள் அடக்கம் செய்யப்பட்ட அடையாளங்களை காணமுடியும் என தெரிவித்தார்கள். பல ஆண்டுகளாக நாங்கள் மகிந்த ராஜபக்கவின் கட்சிக்குதான் வாக்களித்து வருகின்றோம் இந்த எனவே 1990 முன்பு ஒரு குடும்பமாக இருந்த நாங்கள் 23 வருடத்தின் பின்பு நான்கு குடும்பமாக இருக்கின்றோம் எனவே நாங்கள் மரணிக்கும் வரை இந்த இடத்தை விட்டு செல்ல மாட்டோம் எங்கள் மீது பொது பல சேனா பொய்யான வீண்பழி சுமத்தும் நடவடிக்iயில் இரங்கி உள்ளார்கள் என மக்கள் தெரிவித்தனர்.
மழையிலும் வெயிலும் மக்கள் படும்பாட்டினை கண்டு சில ஊடகவியலாளர்களின் கண்ணில் இருந்து கண்ணிர் வந்தன இந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?