Breaking
Wed. Dec 25th, 2024

சிங்கள கடும்போக்குவாத அமைப்பான பொதுபல சேனா அமைப்பு ஒரு செத்த பாம்புக்கு ஒப்பானது என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

சிங்கள கடும்போக்குவாத அமைப்பான பொதுபல சேனா அமைப்பு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல மாவட்டங்களில் போட்டியிட்டது. ஆனால் சிங்கள சகோதரர்கள் மிகச் சரியான பதிலை அந்த அமைப்புக்கு வழங்கிவிட்டார்கள். எனவே அதனைப் பற்றி கருத்துக் கூற விரும்பவில்லை.

சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் பொது பலசேனா அமைப்பு தற்போது செத்த பாம்புக்கு ஒப்பானது. அதற்கு உயிர் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. ஆனால் சிங்களவரோ, தமிழரோ, முஸ்லிமோ அது யாராக இருந்தாலும் தேசிய அரசாங்கத்தின் பயணத்திற்கு தடையாக இருப்பவர்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

எனக்கு அளிக்கப்பட்டுள்ள அமைச்சுப் பொறுப்பின் ஊடாக அனைத்து இனங்களையும் அரவணைத்துச் செல்லும் நடவடிக்கைகள் மூலமாக மிகச் சிறப்பான முறையில் எனது செயற்பாடுகளை முன்னெடுப்பேன் என்றும் அமைச்சர் மனோ கணேசன் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Related Post