Breaking
Mon. Dec 23rd, 2024
பொதுபல சேனா அமைப்பிற்கு பாதுகாப்பு வழங்கியது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சித்தமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பு இந்நாட்டு முஸ்ஸிம் மக்களை அழுத்தத்திகுற்படுத்தினார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகள் கிடைக்காமைக்கு காரணம் பொதுபல சேனா எனவும், வட மாகாணத்தினுள் கோத்தபாய ராஜபக்ச நடத்தி சென்ற செயற்பாடு காரணமாகவே அப்பிரதேச மக்கள் துன்புறுத்தப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பு சூழ்ச்சி மிக்கதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது புரிந்து கொண்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்து்ளார்.

Related Post