Breaking
Fri. Nov 15th, 2024

 வில்பத்து வனாந்தரத்தில் 22 ஆயிரம் ஹெக்டேயர் காணி  சுத்தம் செய்து பள்ளிவாசல்களை நிர்மாணித்து வீடுகளை கட்டியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

(2014-04-17) மாலை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலார் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

1990 ஆம் ஆண்டு முசலி பிரதேசத்தில் வசித்து வந்த முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றினர்.1990 ஆம் ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் அகதிகளாகினர். நானும் அந்த அகதிகளில் ஒருவன்.

மரிச்சுக்கட்டி, கரடக்குழி, பாளைக்குழி, முள்ளிக்குளம் ஆகிய கிராமங்கள் வில்பத்து வனத்தின் எல்லையில்  அமைந்துள்ளன.முஸ்லிம்களின் சொந்த கிராமங்களிலேயே அவர்களை மீள்குடியேற்றுவதற்கான ஜாசின் சிட்டி என்ற வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வில்பத்து வணவள பிரதேசத்தில் எவ்வித கட்டுமாணங்களும் நிர்மாணிக்கவில்லை. அதற்கு வெளியே 72 குடும்பங்கள் ஓலையினால் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது காணிகளை யுத்த காலத்தில் கடற்படை 600 ஏக்கர் நிலத்தினை அவர்களது முகாம்களுக்காக எடுத்துக்கொண்டதால் அவர்கள் மீளக் குடியேறமுடியாமல் உள்ளனர்.

மேலும் மறிச்சுக்கட்டு 300 வீடுகளைக் கொண்ட ஜெசிம் சிட்டி வீடமைப்புத் திட்டம் 20  மட்டுமே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இப் பிரதேசம் வனவளப் திணைக்களத்தினால் அரசாங்க அனுமதியுடன் விடுவிக்கப்பட்ட பிரதேசமாகும். இவர்களுக்கு இக் காணிக்கான உறுதியும் உண்டு எனவும்  அரசினால் தெரிபுசெய்யப்பட்டவர்களுக்கும் மட்டுமே இவ்வீடுகள்  நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டவையாகும்.

ஆனால் வடக்கில் 1990களில் இடம்பெயர்ந்த 20ஆயிரம் முஸ்லிம் மக்களில் மீளக்குடியமர்த்தவேண்டியுள்ளது. 15ஆயிரம் மக்கள் மீளக்குடியமர்வதற்கு உரிய காணிää அடிப்படை வசதிகள் இன்று மீண்டும் புத்ளத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். 20 வருடகாலமாக அவர்கள் விட்டுச் சென்ற வீடுகள், பள்ளிவாசல்கள், பாடசாலைகள் அணைத்தும் அழிக்கப்பட்டு உள்ளன. நான் 2009ஆம் ஆண்டில் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த காலத்தில் 300,000 தமிழ் மக்கள் முகாம்களில் வாழ்ந்து அவர்களை குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டனர். ஆனால் முஸ்லிம்கள் அவ்வாறு இல்லை. 20 வருடங்களுக்குப் பிறகு அவர்கள் மீள குடிபெருவதென்றால் அவர்கள் காடுகளை வெளிசாக்குவதற்கு அவர்களது வீடுகளை மீள நிர்மாணிப்பதற்கு சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களிடம் அனுமதி பெறல் வேண்டும்.

இதற்கு மேலதிகமாக இந்த பொதுபலசேனாத் தேரர் எமது புனித  அல்குர்ஆனையும் விமர்சித்து அந்த குர்ஆனில் நிலங்களை அபகரிப்பது, அத்துடன் ஏமாற்றுவது எமது குர்ஆனில் உள்ள வசனங்கள் எனவும் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்  இதற்காகவும் இவருக்கு எதிராக கொம்பணி வீதி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக முஸ்லீம்கள் பாரிய அளவில் தமது எதிர்ப்பை தெரிவிப்பார்கள் அத்துடன் அதற்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்படும் எனவும்  அமைச்சர் றிசாத் தெரிவித்தார்.

வில்பத்து வனத்தில் சட்டவிரோதமாக முஸ்லிம் பள்ளி வாசல் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனா சுமத்தும் குற்றச்சாட்டில் எந்த உண்மையுமில்லை.குறித்த பிரதேசத்தில் ஆரம்பத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான மூன்று பள்ளிவாசல்கள் அந்த பிரதேசத்தில் இருந்தன. அவற்றை விடுதலைப் புலிகள் அழித்தனர்.

மூன்று பள்ளி வாசல்களுக்கு பதிலாக ஒரே ஒரு பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எனினும் அது வில்பத்து வனத்திலேயோ அதற்குரிய காணியிலேயோ நிர்மாணிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் ரிசாத் பதியூதீன் குறிப்பிட்டார்.

4

1
javascript:;

253

Related Post