Breaking
Mon. Dec 23rd, 2024
‘ ஒரு அடியான் தனது சகோதரனுக்கு உதவி செய்யும் காலமெல்லாம்
அல்லாஹ் அவனுக்கு உதவிசெய்து கொண்டிருப்பான் ‘ (ஹதீஸ்)
மும்மது நிஸாம்தீன் ( வயது 42) இரண்டு பிள்ளைகளின் தந்தை. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இவர் மின் உபகரணங்களைத் திருத்தும் தொழில் புரிபவர். இவரின் மூத்த பிள்ளை பாத்திமா ரீனா மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியில் 8 ஆம் வகுப்பிலும் இரண்டாம் பிள்ளை பாத்திமா ராசிதா இரண்டாம் வகுப்பிலும் கல்வி பயிழ்கின்றனர்.
அண்மையில் இவரிற்கு ஏற்பட்ட திடீர் சுகயீனத்தைத் தொடர்ந்து அவரைப் பரிசோதித்த வைத்தியர் அவரின் தலையில் ஏற்பட்டுள்ள கட்டியொன்றை அறுவைச் சிகிச்சை மூலம் உடனடியாக அகற்றுவதைக் கொண்டு அவரைக் குணப்படுத்த முடியுமெனக் கூறுகின்றனர்.
தற்போது அடிக்கடி மயக்கமடையும் நிலையில் உள்ள இவர் தனது தொழிலையும் அன்றாடப் பணிகளையும் மேற்கொள்ள முடியாத ஒரு இக்கட்டான நிலையில் உள்ளார்.
The Central Hospital  இல் மேற்கொள்ளப்பட வேண்டிய இந்த சத்திர சிகிச்சைக்கு சுமார் 25 இலட்சம் ரூபாய்கள் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்னும் ஒரு மாதகாலத்திற்குள் இச்சத்திர சிகிச்சையை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நிஸாம்தீன் 25 இலட்சம் ரூபாய்களை திரட்டிக் கொள்வதற்காக நல்லுள்ளம்படைத்த பொதுமக்கள் உதவியை நாடுகின்றார்.
தமது கையிலுள்ள நகைகளையும் காணியையும் விற்று சுமார் 7 இலட்சம் ரூபாய்களை திரட்டிக் கொண்ட நிலையில் மிகுதிப்பணத்தை சேகரித்துக் கொள்வதற்காக உங்களை நாடியுள்ளார் அவரின் மனைவி பாத்திமா ரிஸ்னா.
உங்கள் உதவிகளை பின்வரும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைப்பதன் மூலம் ஒரு சகோதரணின் வாழ்வில் ஒளியேற்ற ஒத்துழையுங்கள்.
Name of Account Holder : M.N. Fathima Risna
Account No.                     : 7423429
Bank                                 : Bank of Ceylon
Branch                             : Mawanella
Swift Code                       : BCEYLKLX
mletter_a mri

Related Post